பள்ளிச் சான்றிதழ்கள் தொலைந்தால்...!



*  பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு சான்றிதழ்கள் தொலைந்து போனால்,மீண்டும் அதைப் பெற நினைப்பவர்கள் சம்பவம் நடந்த பகுதியில் இருக்கும் காவல் நிலையத்தில் புகார் செய்து, அதற்கான முதல் தகவல் அறிக்கையின் (FIR) நகலைப் பெற வேண்டும்.

*  காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்படாத பட்சத்தில், அவர்கள் தரும் 'கண்டுபிடிக்க முடியவில்லை' எனும் சான்றிதழைப் பெறுவதோடு, அதைத் தாசில்தாரிடம் சமர்ப்பித்து, அவரிடமும் சான்று பெற வேண்டும்.

*  தீ விபத்தில் சான்றிதழ்கள் அழிந்தாலோ...சிதைந்தாலோ...தீயணைப்பு துறையிடம் சான்று பெற்று, அதை உறுதிப்படுத்தும் வகையில் தாசில்தார் அளவிலான வருவாய்த்துறை அலுவலர் தரும் சான்றிதழையும் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

  வெள்ளம் போன்ற இயற்கை பேரிடரால் சான்றிதழ்கள் அழிந்து போனால், 'சான்றிதழ்கள் அழிந்து விட்டன' என்று தாசில்தாரிடம் இருந்து சான்று பெற்று வைத்துக் கொள்ள வேண்டும்.

 அவசரமாக சான்றிதழின் நகல் தேவை என்றால், சி.சி.எம்.(CCM - Certified Copy of Marksheet) என்று சொல்லப்படும், சான்றிடப்பட்ட நகல் மதிப்பெண் சான்றிதழ் தரப்படும்.

 சி.சி.எம். எனப்படும் இந்த நகல் சான்றிதழை முதல் தடவை பெற, 305 ரூபாயை எஸ்.பி.ஐ.வங்கி (ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா) அல்லது கருவூலத்தில் செலுத்தி, அங்கு வழங்கப்படும் ரசீதை (Challan) பெற வேண்டும். இரண்டாவது தடவை என்றால் 405 ரூபாய் செலுத்த வேண்டும்.

 பணம் செலுத்தியதற்கான வங்கி / கருவூல ரசீது, காவல்துறை மற்றும் தாசில்தார் தரும் சான்றிதழ்களின் நகல் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து, 30 ரூபாய் மதிப்புள்ள அஞ்சல் தலை ஒட்டப்பட்ட, சுயமுகவரியிடப்பட்ட கவருடன் விண்ணப்பிக்க வேண்டும்.

 விண்ணப்பத்தில் நீங்கள் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் கையெழுத்துப் பெற்று, 'செயலாளர், அரசு தேர்வுத்துறை இயக்குநரகம், சென்னை -6' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். 15 நாட்களுக்குள் உங்களுக்கு நகல் சான்றிதழ் கொடுக்கப்படும்.

 சி.சி.எம்.எனப்படும் நகல் சான்றிதழ் தற்காலிகமானதே. அதை நிரந்தரமாகப் பயன்படுத்த முடியாது. நிரந்தர வேலைக்கு டூப்ளிகேட் சான்றிதழ் பெற வேண்டும்.

 நிரந்தரமாக டூப்ளிகேட் சான்றிதழ் வேண்டுமென்றால், வங்கி / கருவூலத்தில் ரூ.505 ரூபாய் செலுத்தி, அதற்காக வழங்கப்படும் ரசீதைப் பெற வேண்டும்.

டூப்ளிகேட் சான்றிதழுக்கான விண்ணப்பத்தில், ஏற்கெனவே படித்த பள்ளியின் தலைமையாசிரியரிடம் கையொப்பம் பெற்று, அதனை மாவட்ட கல்வி அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். காவல்துறை மற்றும் தாசில்தாரிடம் பெற்ற சான்றுகளின் நகலையும் இணைக்க வேண்டும்.

* குறிப்பிட்ட நபரின் சான்றிதழ் தொலைந்துவிட்டது என்று மாவட்ட கல்வி அதிகாரி கெசட்டில் தகவல் வெளியிடுவார். அதன் நகல், சம்பந்தப்பட்ட நபரின் விண்ணப்பத்தோடு அரசு தேர்வுத்துறை இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.

*  அரசுத் தேர்வுத்துறை இயக்குநரகத்தில் இந்த விண்ணப்பம் முறையாக பரிசீலிக்கப்பட்டு, அங்கிருந்து டூப்ளிகேட் சான்றிதழ் மாவட்ட கல்வி அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கிருந்து சம்பந்தப்பட்ட நபருக்கு தகவல் தரப்படும். அதன்பிறகு, நேரில் சென்று சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம்.

Comments

Related Posts Plugin for WordPress, Blogger...

Popular Posts

மூக்குத்தி அணிவது ஏன்?

UI Certifications Q & A

Technicals details select

Do's and Don'ts - Central Pollution Control Board (CPCB),

for programmers dropdown

medicals dropdown

:: Useful web links List